தனியே நான் தொலைந்தேன்,
தேட முகவரி இல்லை...
இருளில் நீ தேட
உனக்கு அனுமதி இல்லை...
கால்கள் தடம் மாறி,
திசை அறியாது நடக்கின்றேன்,
கடந்து போகும் முகங்களில்
உன் முகம் தேடினேன்...
என்னை மறந்து கண் அயர்ந்தாலும்,
கனவிலும் வரவில்லை,
'வா' என்று அழைக்க காத்திருக்கிறாயோ ?
இதோ என் கால்கள், அதன் தடம் தேடி நடக்கிறது...
உன்னில் என்னை தேடினேன்,
உன் இதயத்தின் ஓரத்தில்..
பல துளியில் ஓர் துளியாய் நான்.
என் இதயத்தில் தேடலில்லை,
விஸ்வரூபமாய் நீ!
நீ வருவாய் என
விடியும் வரை காத்திருந்தேன்,
இனிதாய் இடை இழையப்
பட்டுடுத்தி நின்றிருந்தேன்.
பதுமையாய் வழிப் பார்த்து...
உன் நினைவில் மூழ்கிருக்க,
சில்லென்று தவழ்ந்த தென்றல்,
பனித்துளியாய் தெளித்த தூறல்...
கண்ணிமைக்கும் முன் மாறியதென்ன?
சுடு நீராய் சுட்டதென்ன?
ஆழ் கடலில் அமிழ்ந்தாலும்,
அக்கினியாய் சுட்டாலும்,
நீ இருப்பின் இதம் தருமே...
உன் இரு கைககள் அனையாகுமே.
பாலையில் ஈரம் சுரக்கலியே,
மேகம் இன்னும் கருக்கலியே,
அண்ணாந்து பாத்தும், அதரம் பெருகலியே,
எறங்கி வரத்தான் மனசும் வல்லையே ....
மிஞ்சியும் போட்டு அழகு பாத்தேன்,
மஞ்சள் அரைச்சு முழுகியாச்சுது
மானம் கறுத்து மழையும் ஆச்சுது...
மச்சான் வரக்காணலியே,
மண்ணு மனம் போகலியே,
மனசு முழுக்க நெறஞ்சிருக்க,
நெருங்கி வர நான் துடிக்க....
மனுஷனை இன்னும் காணோமே
விளக்கு வைக்க நாழி ஆச்சுதே
வஞ்சி நெஞ்சம் தாங்கலையே,
இந்த கள்ளன் மனம் இறங்கலையே...
தலைவாழை இலை போட்டேன்,
தண்ணி சொம்பு பக்கம் வைச்சேன்,
நெய் சோறு ஆறுதே,
நடு நிசி ஆகுதே...
மாரியாத்தா நான் பொங்கல் வைக்கேன்
ஆடு வெட்டி விருந்து வைக்கேன்
என் புருஷன் வீடு வர அருள்புரி அம்மா!
என் மனசு குளிர வரம் குடுடி அம்மா....
A Tamil song written for my friend's composition... You can check out his composition here, maybe try to hum these lines and let me know, if its good...